| Downloads | Contact Me | Feedback |
Tamil Font Problem? |

The Lost Hours  கடவுளுக்கு ஒரு சாபம் 

Google   wwwprramesh.com


download e-books
 

பெப்சி-கோகோ கோலா பாட்டலை தூக்கில் தொங்க விட்டு ஆர்ப்பாட்டம்
தினகரன் 9-8-2003

மதுரை, ஆக. 9- பெப்சி-கோகோ கோலா குளிர் பானங்களைக் குழந்தைகள், பெரியவர்கள் அருந்துவதால் அவர்களுக்குப் பாதிப்பு ஏற்படும் என அச்சப்படுகின்றனர். அதனால் பெப்சி, கோகோ கோலாவை மக்கள் அனைவரும் எதிர்க்கத் தொடங்கி உள்ளனர். அவர்கள் தங்கள் எதிர்ப்பை பல்வேறு வகைகளில் காட்டி வருகின்றனர். இதனால் கடைகளில் பெப்சி, கோகோ கோலா குளிர்பானங்கள் விற்பனை குறைந்து உள்ளது.

மதுரை அண்ணாநகரில் நேற்று (வெள்ளி) காலை மனித விடுதலை இயக்கம் சார்பில் பெப்சி-கோகோ கோலாவுக்கு எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் நூதன போராட்டம் நடந்தது. மனித விடுதலை இயக்கத்தை சேர்ந்த பொதுச் செயலாளர் பி.ஆர்.ரமேஷ் என்பவர் மரத்தில் பெப்சி - கோகோ கோலா பாட்டல்களைத் தலைகீழாகக் கட்டி ஒரு மரத்தில் தொங்க விட்டு நூதனமான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினார். இதனால் அங்குப் பெரும் கூட்டம் கூடியது. அவ்வழியாகப் போவோர் வருவோர் அனைவரும் இந்த நூதன போராட்டத்தைக் கண்டுகளித்தனர்.

அப்போது அவர் 'மனித உயிர்களைக் குடிக்கும் கோகோ கோலா-பெப்சியைத் தூக்கி எறிவோம். தூக்கிலிடுவோம்' என கூறி பிரசாரம் செய்தார். இதனால் அந்த வழியாகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது பற்றிய தகவல் அறிந்ததும் அண்ணாநகர் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் போராட்டம் நடத்திய ரமேஷிடம் இந்தக் குளிர்பானங்களுக்கு இன்னும் தடை விதிக்கவில்லை. அதனால் இவ்வாறு செய்யக் கூடாது என எச்சரித்தனர். பின்னர் ரமேசிடம் போலீசார் 'இனி இம் மாதிரி செய்யமாட்டேன்' என எழுதி வாங்கிக் கொண்டு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவத்தால் அங்குப் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

 

தொகுப்பு

 

Website best viewed in Microsoft Internet Explorer 6.0+ in 1024x768 resolution