| Downloads | Contact Me | Feedback |
Tamil Font Problem? |

The Lost Hours  கடவுளுக்கு ஒரு சாபம் 

Google   wwwprramesh.com


download e-books
 

பெப்சி-கோகோவை தூக்கிலிட்டு போராட்டம்
மதுரையில் நடந்தது
மாலை மலர் 8-8-2003

மதுரை, ஆக. 8- பெப்சி-கோகோவைத் தூக்கிலிட்டு போராட்டம் மதுரையில் நடந்தது.

குளிர்பானங்களில் விஷம்

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் வெளிநாட்டு குளிர்பானங்களான கோகோ கோலா, பெப்சி, மிராண்டா உள்பட 12 வகை குளிர்பானங்களில் பூச்சிக்கொல்லி மருந்து கலவை அதிகமாக இருப்பதாக இந்திய அறிவியல் மையம் கண்டறிந்து உள்ளது.

இதனைக் குடித்தால் புற்றுநோய், மலட்டுத்தன்மை, குறைபிரசவம் ஏற்படும் என்று டெல்லி அறிவியல் மையம் கூறியுள்ளது.

இது நாடு முழுவதும் பெரும் புயலை ஏற்படுத்தி உள்ளது. இதனை அறிந்த பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் இந்தக் குளிர்பானங்களை விற்கக் தடை விதித்து உள்ளது.

இதற்கிடையில் கோகோ கோலா, பெப்சி குளிர்பானங்களைக் குடித்தால் என்ன ஆகுமோ? என மக்கள் பீதியில் உறைந்து போய் உள்ளனர். மதுரையில் பல இடங்களில் குளிர்பான விற்பனை மந்தமாகி உள்ளது.

தூக்கிலிடும் போராட்டம்

இந்த நிலையில் மனிதனின் உயிரைக் குடிக்கும் குளிர்பானங்களைத் தூக்கிலிட்டு போராட்டம் நடத்தப்போவதாக மனித விடுதலை இயக்கம் அறிவித்து இருந்தது.

அதன்படி பொதுச்செயலாளர் ரமேஷ் தலைமையில் மனித விடுதலை இயக்கத்தினர் அண்ணா நகர் அம்பிகா தியேட்டர் பஸ் நிறுத்தம் அருகே ஒன்றுகூடினார்கள். அவர்கள் கோகோ கோலா, பெப்சி ஆகிய குளிர்பானங்களைத் தூக்கிலிட்டு போராட்டம் நடத்தினார்கள்.

வெளிநாட்டு குளிர்பானங்களைச் சாப்பிட்டால் மனிதனும் தூக்கில் தொங்குவதற்குச் சமம் என கோஷம் எழுப்பினார்கள். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்தனர். இங்கு அனுமதி இன்றி போராட்டம் நடத்தக் கூடாது என்று போலீசார் கூறியதைத் தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

 

தொகுப்பு

 

Website best viewed in Microsoft Internet Explorer 6.0+ in 1024x768 resolution