| Downloads | Contact Me | Feedback |
Tamil Font Problem? |

The Lost Hours  கடவுளுக்கு ஒரு சாபம் 

Google   wwwprramesh.com


download e-books
 

பெச்சி-கோகாகோலா பானங்களை தூக்கிலிட்டு நூதன போராட்டம்
தினத்தந்தி 9-8-2003

மதுரையில் பெப்சி-கோகா கோலாபானங்களைத் தூக்கிலிட்டு நூதன போராட்டம் நடந்தது.

பெப்சி

டெல்லியில் உள்ள அறிவியல் மற்றும் சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு மையம் நடத்திய சோதனையில் இந்தியாவில் விற்பனையாகும பெப்சி, கோகாகோலா உள்பட 12 வகை குளிர்பானங்களில் பூச்சி கொல்லி மருந்துகள் இருப்பது தெரியவந்தது. இதனால் இந்தக் குளிர் பானங்களைக் குடிப்பவர்களுக்குப் புற்று நோய், மலட்டுத்தன்மை உள்பட பல நோய்கள் ஏற்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.

இதையடுத்து டெல்லி பாராளுமன்றவளாகத்தில் குளிர்பானங்கள் விற்க தடை விதிக்கப்பட்டது. தமிழ்நாட்டிலும் மாணவ-மாணவிகள் மத்தியில் இந்த வகை பானங்களைக் குடிப்பதா, வேண்டாமா? என்பதில் குழப்பம் நிலவி வருகிறது. இதனால் பல்வேறு கல்வி நிறுவனங்கள் தங்கள் உணவகங்களில் தடை செய்யப்பட்ட 12 வகை குளிர்பானங்களை விற்க தடை விதித்துள்ளன.

விற்பனை

மதுரையிலும் குளிர்பான பிரச்சினை விசுவரூபம் எடுத்து உள்ளது. பல்வேறு சமூக அமைப்புகளும் தடை செய்யப்பட்ட குளிர்பானங்களைக் குடிக்காதீர்கள். அதனால் உடலுக்குத் தீங்கு என்று பலமாக கோரிக்கை விடுத்து வருகின்றன. இதனால் பொது மக்களிடம் குளிர்பானம் குறித்து பீதி ஏற்பட்டதால் சில நாட்களுக்கு முன்பு வரை விற்பனையில் கொடி கட்டி பறந்த பெப்சி, கோகா கோலா குளிர்பானங்கள் வியாபாரம் முடங்கி போனது.

மேலும் குளிர்பானங்களைக் கண்டாலே பொது மக்கள் வெறுப்புடன், அச்சத்துடன் ஒதுங்கி செல்கின்றனர். இதனால் மதுரை உள்பட பல முக்கிய நகரங்களில் குளிர்பான விற்பனை படுமந்தமான நிலையில் காணப்படுகிறது.

தூக்கிலிட்டனர்

கோகாகோலா-பெப்சி பாட்டில்களைத்
தூக்கிலிட்டுப் போராட்டம் நடத்தியவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம்
நடந்தபோது எடுத்து படம்.

இந்த நிலையில் மதுரை மனித விடுதலை இயக்கம் சார்பில் நேற்று வெளிநாட்டு குளிர்பானங்களை தூக்கிட்டு போராட்டம் நடத்தப்பட்டது. அண்ணா நகர் பஸ் நிறுத்தம் முன்பு இந்தப் போராட்டம் நடந்தது. இயக்க பொதுச்செயலாளர் ரமேஷ் தலைமை தாங்கினார். மனித விடுதலை இயக்கத்தினர் சுமார் 20க்கும் மேற்பட்ட பெப்சி, மிரண்டா உள்பட பலவகை குளிர்பானங்களை வாங்கி வந்து இருந்தனர். பின்னர் அந்த குளிர்பானங்களை ஒரு கயிற்றில் கட்டி அருகில் இருந்த மரத்தில் தூக்கிவிட்டுப் போராட்டம் நடத்தினர். அப்போது நச்சுத்தன்மை நிறைந்த வெளிநாட்டு குளிர்பானங்களைக் குடிப்பது மனிதன் தூக்கில் தொங்குவதற்குச் சமம் எனினும் இந்த வகை பானங்களைத் தடை செய்ய வலியுறுத்தியும் கோஷம் எழுப்பினர்.

வாக்குவாதம்

இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த அண்ணாநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் இங்குப் போராட்டம் நடத்த நீங்கள் அனுமதி வாங்கவில்லை, எனவே போராட்டம் நடத்தக் கூடாது, கலைந்து செல்லுங்கள் என்று கூறினர்.

இதனால் மனித விடுதலை இயக்கத்தினருக்கும் போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் போலீசார் தொடர்ந்து போராட்டம் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தனர். இதைத் தொடர்ந்து போராட்டம் நடத்தியவர்கள் கலைந்து சென்றனர்.
 

 

தொகுப்பு

 

Website best viewed in Microsoft Internet Explorer 6.0+ in 1024x768 resolution