தினத்தந்தி 16-4-2003
மதுரை, ஏப். 16 - மதுரை அண்ணாநகரில் வைகை ஸ்ரீமீனாட்சி
ரிசர்ச் பவுண்டேஷன் சார்பாக அன்னதானம் பெண்களுக்கு மஞ்சள் கயிறு, நீர்மோர்
வழங்கும் விழா தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு நடைபெற்றது. விழாவிற்குக்
கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்றத் தலைவர் ஆர். சொக்கலிங்கம் தலைமை
தாங்கினார். கராத்தே சம்மேளன மாநில செயலாளர் காளை ராஜா, பி. பாலமுருகன்,
ஆகியோர் முன்னிலை வகித்தனர். வக்கீல்கள் கு.சாமித்துரை, மனோகரன் ஆகியோர்
அன்னதான நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தனர். மகளிர் நல குழு தலைவிகள் எஸ்.
மகேஸ்வரி பி. ஆதம்மாள் ஆகியோர் மஞ்சள் கயிறுகளை வழங்கினர். விருதுநகர்
மாவட்ட செசன்சு நீதிபதி முனியாண்டி, நகர பண்பாட்டு கழகச் செயலாளர் புலவர்
சங்கரலிங்கம், கவிஞர் நெல்லை பாலு, வாழ்த்துரை வழங்கினர். விழாவில்
ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளைப்
பவுண்டேசன் சேர்மன் பி.ஆர். ரமேஷ் செய்திருந்தார். |