மாலைமலர் 27-1-2003
சமயநல்லூரைச் சேர்ந்த சண்முகம் என்ற மாணவர், தேசிய இளம்
விஞ்ஞானி என்ற விருது பெற்றவர். வறுமையின் காரணமாக இவர் தனது என்ஜினீயரிங்
படிப்பைத் தொடர முடியவில்லை.
இந்நிலையில் இவருக்கு ஸ்ரீ மீனாட்சி தொண்டு நிறுவனம்
சார்பாக மாவட்ட கலெக்டர் சேது. ராமச்சந்திரன் ரூ. 10 ஆயிரம் நிதியை
வழங்கினார். இந்நிகழ்ச்சிக்குத் தமிழ்நாடு மனித உரிமைக்கழக கவுரவத் தலைவர்
சாமிதுரை, நெல்லை பாலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஸ்ரீ மீனாட்சி தொண்டு நிறுவனத் தலைவர் கவிஞர் ரமேஷ்,
செயலாளர் பாண்டியராஜன், வக்கீல் முக்காஸ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

|
தேசிய விருது பெற்றும், வறுமையால்
என்ஜினீயரிங் படிப்பைத் தொடர
முடியாத சமயநல்லூர் பகுதி மாணவன் சண்முகத்திற்கு
ஸ்ரீ மீனாட்சி தொண்டு நிறுவனம் சார்பாக மாவட்ட கலெக்டர் சேது.
ராமச்சந்திரன் ரூ. 10 ஆயிரத்தை வழங்கியபோது எடுத்த படம். |
|