தினகரன் 8-1-2003
மதுரை,
ஜன 8-என்ஜினீயரிங் படிப்பைத் தொடர முடியாத இளம் விஞ்ஞானிக்கு உதவித் தொகை
மதுரையில் நடந்த நூல் வெளியீட்டு விழாவில் வழங்கப்பட்டது.
மதுரை அண்ணாநகர் பொன்மணி மகாலில் கவிஞர் பி.ஆர்.
எழுதிய 'பாலைவனத்தில் நெற்கதிர்கள்' என்ற நூல் வெளியீட்டு விழா நேற்று (ஞாயிறு)
இரவு நடந்தது. இந்த விழாவிற்கு ஞானபீடம் இலக்கிய பேரவை செயலாளர் பொன்.
சந்திரசேகரன் தலைமை தாங்கினார். என். மனோகரன் முன்னிலைவகித்தார்.
வழக்கறிஞர் சங்கத் தலைவர் கே. வெள்ளைச்சாமி நூலை
வெளியிட்டார். கண்ணதாசன் நற்பணி மன்றத் தலைவர் ஆர். சொக்கலிங்கம் நூலை
பெற்றுக்கொண்டார். மனித உரிமை கழக கவுரவ தலைவர் கு. சாமிதுரை, கவிமாமணி
வீரபாண்டிய தென்னவன், கவிஞர்கள் ச. சுப்பையா, நெல்லை பாலு, புலவர்
சங்கரலிங்கம், மகா சக்தி மகளிர் குழு எஸ். மகேஸ்வரி, சந்தியா மகளிர் குழு
செண்பகவள்ளி உள்பட பலர் கலந்துகொண்டனர். |