தினகரன் மதுரை, 8 நவம்பர் 2006
மதுரை, நவ. 8: ஐக்கிய ஜனதாதளம் மாநில இளைஞர் அணி செயலாளர்
பி.ஆர்.ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கை: அமெரிக்காவே ஈராக்கில் அணு ஆயுதங்கள்
இல்லை யென இப்போது கூறிவிட்டது.
அப்படியென்றால் நடந்த போரே சர்வதேச சட்டவிரோத செயல்.
சர்வதேச நீதிமன்றமும் ஐநா சபையும் இதை கண்டித்து நியாயமான நடவடிக்கை
எடுக்க தவறிவிட்டது.
இப்போது அதை மேலும் உறுதிபடுத்தும் வகையில் ஈராக் அரசு
சதாம் உசேனுக்கு தூக்கு தண்டனை விதித்துள்ளது.
இதனை ஐக்கிய ஜனதா தளம் இதனை வன்மையாக கண்டிக்கிறது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். |