| Downloads | Contact Me | Feedback |
Tamil Font Problem? |

The Lost Hours  கடவுளுக்கு ஒரு சாபம் 

Google   wwwprramesh.com


download e-books
 

வாஜ்பாய், அத்வானியால் பா.ஜ.,வில் சேர்ந்தேன்!
தினமலர் மதுரை 25-10-2003

மதுரை மாவட்ட விவசாய அணி செயலாளர் (பிரபல தாதா) அண்ணா நகர் ரமேஷ்: ஜாதி, மத வெறியர்களுக்கு எதிரான போராட்டம் ஒன்றை அறிவித்தேன். அதில் யார் பெயரையும் நான் குறிப்பிடவில்லை. அந்தப் போராட்டத்தில் ஜாதி, மத வெறியைக் கொடும்பாவியாகக் கட்டி எரித்தேன். அதற்காகப் போலீசார் என்னைக் கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர்.

வழக்கமாக இதுபோன்ற வழக்குகளுக்கு 50 ரூபாய் பைன் போடுவதோடு சரி. ஆனால், எரித்தது நான் என்பதால் என்னைச் சிறையில் போட்டனர். அது மட்டுமில்லாமல் இந்திய இறையாண்மைக்கு நான் குந்தகம் விளைவித்ததாகவும் நான் எரித்த கொடும்பாவியைப் போலீசார் கவனிக்காமல் விட்டிருந்தால், அது பக்கத்தில் உள்ள குடிசைகளில் தீப்பிடித்திருக்கும் என்றும் வழக்கை ஜோடித்தனர். குடிசைகளே இல்லாத பகுதியில்தான் நான் எரித்தேன்.

கொடும்பாவி எரித்ததைத் தவிர, வேறு எந்த வழக்கும் இப்போது என் மீது கிடையாது. இந்த நிலையில், இப்பவும் ஏறக்குறைய தலைமறைவு வாழ்க்கைதான் வாழ்கிறேன். நிரந்தரமாக எங்கும் தங்க முடியவில்லை. ஒரிடத்தில் தங்கி சாப்பிட முடியவில்லை. நாடோடியாகத் திரிகிறேன். மக்கள் என்னைப் புரிந்துகொண்ட அளவு பத்திரிகைகளோ போலீசோ புரிந்துகொள்ளவில்லை என்பதுதான் என் வருத்தம்.

என்னைப் பல்வேறு கட்சிகள் தங்கள் இயக்கத்துக்கு வருமாறு கூப்பிட்டன. குறிப்பாக ம.தி.மு.க., சார்பில் அழைப்பு வந்ததோடு, பதவியும் தருவதாகக் கூறினர். அதில் சேர்ந்திருந்தால் என்னை ஏதோ தமிழ் தீவிர வாதியாகச் சித்தரித்து பொடாவில் போட்டிருப்பர். தி.மு.க., அ.தி.மு.க.,வில் சேர்ந்து செல்வு செய்யும் அளவு எனக்கு வசதியில்லை. காங்கிரசில்
இருக்கிற கோஷ்டியில் ஒரு கோஷ்டியாகி காணாமல் போகவும் நான் விரும்பவில்லை.

நான் ஆன்மிகத்தில் நம்பிக்கையுடையவன். தேசியத்திலும் தெய்வீகத்திலும் நம்பிக்கையுடையவர்கள் பிரதமர் வாஜ்பாயும் அத்வானியும். அதனால் அவர்கள் தலைமையை ஏற்பது என பா.ஜ.வில் சேர்ந்தேன்.

 

தொகுப்பு

 

Website best viewed in Microsoft Internet Explorer 6.0+ in 1024x768 resolution