தினமணி, மாநகர்மணி
அண்ணாநகர் ரமேஷ்... ஒரு காலத்தில் காவல் துறை வட்டாரத்தைக்
கலக்கிய பெயர்.
தமிழ்ப் படங்களில் வருவதுபோல் ஒரு கேங் லீடராய்
அறியப்பட்ட இவர் மீது 24 கொலை, கொலை முயற்சி வழக்குகள்...
அண்ணாநகர் பகுதியில் ரமேஷின் ராஜ்ஜியம் நடந்தபோது இவர்
தரப்பில் உருண்ட தலைகள் 9; எதிர்த் தரப்பு கணக்கு 14.
குண்டர்
தடுப்புச் சட்டத்தில் ஆறாண்டுகளையும், விசாரணைக் கைதியாக 3 ஆண்டுகளையும்
சிறையில் கழித்த இவர் திடீரென ஒரு புது அவதாரம் எடுத்திருக்கிறார். அது,
கவிஞர்!
(புகைப்படம்)
சிறைப் பறவையாக இருந்த நாட்களில் இவர் எழுதிய கவிதைகளைத்
தொகுத்து 'பாலைவனத்தில் நெற்கதிர்கள்' என்ற பெயரில் நூலாக
வெளியிட்டிருக்கிறார்.
வன்மையான தாதாவுக்குள் மென்மையான இதயமா? எப்படி இவர்
கவிஞராக மாறினார்?
"எனது கடந்த காலம் ஒரு திகில் வரலாறு. நெருங்கிய நண்பர்
ஒருவர் அநியாயமாகக் கொலை செய்யப்பட்டதையடுத்து இப்படுகுழியில் இறங்கினேன்.
அப்படியே நாட்கள் ஓடிவிட்டன. இதில் நான் இறங்கிப் பட்ட கஷ்டங்கள்,
அனுபவங்களே என்னைத் திருத்தின.
தற்போது ஒரு அறக்கட்டளை ஆரம்பித்துள்ளேன். அதன் மூலம்
மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற உறுதியோடு இருக்கிறேன்..."
என்கிறார்.
பி.கு: அண்ணாநகர் ரமேஷ் என்ற பெயர் நமது
வாசகர்களுக்குப் பரிச்சயமாகியிருக்கலாம். 'மாநகர்மணி'யில் பல கவிதைகளை
இவர் எழுதியுள்ளார். |