| Downloads | Contact Me | Feedback |
Tamil Font Problem? |

The Lost Hours  கடவுளுக்கு ஒரு சாபம் 

Google   wwwprramesh.com


download e-books
 

மதுரையில் அனுமதியின்றி நிறுவ முயன்ற தமிழன்னை சிலை அகற்றம்
தினமணி, மதுரை 26 மார்ச், 2003

மதுரை அண்ணாநகரில் அனுமதியின்றி நிறுவ முயன்ற தமிழன்னை சிலையை மாநகராட்சியினர் அகற்றினர்.


மதுரை அண்ணா நகர் பஸ் நிறுத்தம் அருகே சாலையோரத்தில் அனுமதி பெறாமல் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் நிறுவப்பட்ட தமிழ் அன்னை சிலையை அகற்றிய மாநகராட்சியினர்.
 

அண்ணா நகர் பஸ் நிறுத்தம் அருகே நான்கு சாலைகள் சந்திப்பில் தமிழன்னை சிலையை அந்தப் பகுதியைச் சேர்ந்த சிலர் செவ்வாய்க்கிழமை அதிகாலை வைத்தனர்.

சுமார் 3 அடி உயரத்தில் சிமெண்டாலான இச்சிலையை வைப்பதற்கு மாநகராட்சியோ, காவல் துறையோ அனுமதிக்கவில்லை.

இந் நிலையில், இச் சிலை வைக்கப்பட்ட தகவலறிந்து காவல் துறையினரும் மதுரை மாநகராட்சி அதிகாரிகளும் சாலையின் மையப் பகுதியில் இருந்த சிலையை அகற்றினர்.

இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்தச் சிலையை நிறுவ முயன்றவர்களைக் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

 

தொகுப்பு

 

Website best viewed in Microsoft Internet Explorer 6.0+ in 1024x768 resolution