| Downloads | Contact Me | Feedback |
Tamil Font Problem? |

The Lost Hours  கடவுளுக்கு ஒரு சாபம் 

Google   wwwprramesh.com


download e-books
 

திருந்தி வாழ நினைக்கும் ரவுடி கும்பல் தலைவன் அண்ணாநகர் ரமேஷ்
தினமலர் மதுரை 31-10-2002

மதுரை, அக். 31 - 'கத்தியை எடுத்தவனுக்குக் கத்தியிலே சாவு' என்று ஒரு பழமொழி உண்டு. கத்தியை எடுத்ததால் பல கொலை, கொள்ளை வழக்குகளில் சம்பந்தப்பட்ட அண்ணாநகர் ரமேஷ் திருந்தி வாழ நினைக்கிறார். அவரைப் போலீசார் துப்பாக்கி முனையில் விடாமல் துரத்துகிறார்கள். 'புலி சைவம் சாப்பிடுமா?' என்று போலீசார் சந்தேகப் பார்வை பார்ப்பதால் இன்னமும் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.

மதுரை அண்ணாநகரைச் சேர்ந்தவர் ரமேஷ். நண்பனைக் கொலை செய்ததற்காகப் பழிக்குப் பழி வாங்க நடந்த நிகழ்ச்சியில் ரமேஷ் பெயரும் சேர்க்கப்பட்டு போலீஸ் பிடியில் சிக்கினார். 2 ஆண்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழும், 6 ஆண்டுகள் கோர்ட் காவலிலும் வைக்கப்பட்டு 8 ஆண்டு சிறைவாசத்திற்குப் பிறகு ரமேஷ் திருந்தி வாழ நினைப்பதாகக் கூறுகிறார். இவர் மீதான வழக்குகளில் இருந்து விடுதலையாகிவிட்டார்.

அவருடைய சிறப்பு பேட்டி: பிறவியிலேயே நான் ரவுடி இல்ல. டீ, சிகரெட் தவிர மற்ற கெட்ட பழக்கமே கிடையாது. எப்படியோ ரவுடியாகி போனேன். மதுரையில் இரு கோஷ்டிகளின் மோதலால் குறைந்தபட்சம் 15 பேர் வரை இறந்து விட்டார்கள். இனி யாரைக் கொலை செய்ய போகிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால் நான் கத்தி, குண்டு, துப்பாக்கியைத் தூக்கி எறிந்துவிட்டேன். திருந்தி வாழ நினைக்கிறேன். போலீசார் என்னை விடாமல் துரத்துகிறார்கள். எனக்குத் திருமணம் ஆகவில்லை. பெற்றோரும் துரத்தி விட்டார்கள். தினமும் தலைமறைவு வாழ்க்கை வாழ்வது வெறுத்து போச்சு, 8 ஆண்டு சிறை வாழ்க்கையில் எந்தத் தவறும் செய்ததில்லை. சிறையில் கைதிகளுக்கும் தலைவனாக இருந்திருக்கிறேன். காவிரி பிரச்சினைக்காகச் சிறையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினேன். அதிகாரிகள் அனுமதிக்க மறுத்து தண்டனை கொடுத்தார்கள். சிறையில் கைதிகளுக்கு நல்வழிப்படுத்தவும் கைதிகள் சண்டை போட்டுக் கொள்ளாமல் இருக்கவும் அட்வைஸ் செய்திருக்கிறேன். ஒருவர் சாப்பாட்டைப் பிடுங்கி மற்றொருவர் சாப்பிட்டால் சண்டை போடுவேன், கஞ்சா குடித்தால் எனக்குப் பிடிக்காது. இப்படிப் பலரைத் திருத்திய நான் சிறைக்கு வெளியிலும் நல்ல வாழ்க்கை வாழ நினைக்கிறேன். போலீசார்தான் புரிந்துகொள்ள மறுக்கிறார்கள்.

என்னைப் போலீசார் பிடித்தால் சுட்டுக் கொன்றுவிடுவார்கள். என் மீது போட்ட வழக்குகள் பொய் வழக்குகள். எந்தச் சம்பவமாக இருந்தாலும் போலீசார் என் கோஷ்டியைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லி வழக்கை ஜோடிப்பார்கள். போலீசார் நியாயமாக நடந்திருந்தால் என் வாழ்க்கை வீணாகியிருக்காது. இனி எந்த ரவுடியுடனோ அரசியல் சட்டத்திற்கு விரோதமாகவோ செயல்படமாட்டேன். அறவழியில், ஆன்மிக வழியில் தொண்டு செய்ய நினைக்கிறேன். என்னை எப்படி வேண்டுமானாலும் கண்காணித்துக்கொள்ளுங்கள் என்று போலீசாரிடம் சொன்ன பிறகும் போலீசார் சுட்டுக் கொல்ல சபதம் எடுத்திருக்கிறார்கள். என் எதிரிகளால் ஆபத்து வந்தால் பார்த்துக்கொள்வேன். ஆனால் போலீசார் மூலம் ஆபத்து வரக் கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

இனி இவர் மனிதனாக வாழ்வதா மரணமடைவதா என்பது போலீசார் கையில்தான் இருக்கிறது.

 

தொகுப்பு

 

Website best viewed in Microsoft Internet Explorer 6.0+ in 1024x768 resolution