தினத்தந்தி 20.8.2003
மதுரை, ஆக. 20 - மனித விடுதலை இயக்கம் சார்பில் நேற்று
தீய சக்திகளை ஒழிக்க வேண்டும் என்றும் சாதிமத இன வெறியர்களை அழிக்க
வேண்டும் என்றும் ஊழல் பேர்வழிகளைக் கொளுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளுடன்
அண்ணா பஸ் நிலைய ரவுண்டானா அருகில் கொடும்பாவியை எரித்து ஆர்ப்பாட்டம்
ஏற்பட்டது.
இது பற்றித் தகவலறிந்த மதிச்சயம் போலீஸ் இன்ஸ்பெக்டர்
அசோக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு
விரைந்து சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பின்னர் கொடும்பாவியை
எரித்து அமைதிக்குக் குந்தகம் விளைவித்ததாக மனித விடுதலை இயக்க
பொதுச்செயலாளர் ரமேஷ் (வயது 28), அண்ணாநகரை சேர்ந்த சந்திரசேகர் (21),
சௌந்திரபாண்டியன் (20) ஆகியோரை கைது செய்தனர். பின்பு மதுரை 2-வது
ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த
மாஜிஸ்திரேட்டு ஜெகந்நாதன், அவர்கள் 3 பேரையும் 15 நாள் காவலில்
வைக்கும்படி உத்தரவிட்டார். |