தினமணி செப். 18. 2004
மதுரை, செப்.18, கவிஞர் பி.ஆர்.ரமேஷ் எழுதிய 'தொலைந்த
நேரங்கள்' என்ற புத்தக வெளியீட்டு விழா மதுரையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
மதுரை இலக்கியப் பேரவைத் தலைவர் சண்முகத் திருக்குமரன்
தலைமை வகித்தார். வழக்கறிஞர் என். மனோகரன் முன்னிலை வகித்தார். காளை ராஜா
வரவேற்றார்.
இந்திய வழக்கறிஞர் சங்கத்தின் செயலாளர் கு. சாமித்துரை
புத்தகத்தை வெளியிட்டார். அதன் முதல் பிரதியைக் கவிஞர் பேரவைத் தலைவர்
வீரபாண்டிய தென்னவன் பெற்றுக்கொண்டார்.
விழாவில் புலவர் வை. சங்கரலிங்கம், கவிஞர்கள்
சீனிவாசகப்பாண்டி, நௌஷாத் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
நூல் ஆசிரியர் பி.ஆர். ரமேஷ் ஏற்புரையாற்றினார்.
வழக்கறிஞர் பி. பாண்டித்துரை நன்றி கூறினார். |