| Downloads | Contact Me | Feedback |
Tamil Font Problem? |

The Lost Hours  கடவுளுக்கு ஒரு சாபம் 

Google   wwwprramesh.com


download e-books
 

நிம்மதியை தேடும் மதுரையின் 'பிரபல ரவுடி'
தினமலர் மதுரை 3-9-2005

எழுத்தாளர், தொண்டு நிறுவனத்தின் தலைவர், பா.ஜ.,வின் மாவட்ட விவசாய அணி செயலாளர் எனப் பல முகங்களை கொண்டவர் 'அண்ணாநகர்' ரமேஷ். ரவுடியான இவர் 'பாலைவனத்தில் நெற்கதிர்கள், தொலைந்த நேரங்கள்' ஆகிய பெயரில் கவிதை தொகுப்பை வெளியிட்டுள்ளார். தற்போது போர்முனையில் ஒரு கனவு, ஒரு கல்லறை பேசுகிறது, அரசியல்வாதிகளும் அவர்களின் குற்றங்களும் எனப் பல புத்தகங்களை எழுதிவருகிறார்.

தனது 14 வயதில் வன்முறை பாதையில் நடந்த இவர் மீது 20க்கும் மேற்பட்ட வழக்குகள், 3 முறை குண்டர் சட்டம் என 28 வயதுக்குள் 9 ஆண்டுகளைச் சிறையிலேயே கழித்தார். கடந்த 5 ஆண்டுகளாக எந்தக் குற்ற வழக்கிலும் சம்பந்தப்படாமல் 'சமூக' சேவையில் ஈடுபட்டுவந்தார். சமீபத்தில் கரும்பாலையைச் சேர்ந்த பாண்டி என்பவரிடம் வழிப்பறி செய்ததாக அண்ணாநகர் போலீசார் இவரை கைது செய்தனர்.

'நான் மனிதனாக வாழ வேண்டும். பா.ஜ.,விலிருந்து விலகி விடுகிறேன். அமைப்புகளைக் கலைத்துவிடுகிறேன். வழிப்பறி வழக்கை முடித்துவிட்டு வேறு மாநிலத்திற்கு சென்று உழைத்துப் பிழைத்துக்கொள்கிறேன். என் நிகழ்காலமும், எதிர்காலமும் அமைதியாக, நிம்மதியாக ஆன்மிக தேடலாக இருக்க வேண்டும் என விரும்புகிறேன். என்னால் தவறான பாதைக்குச் செல்ல இயலாது. நான் தவறு செய்தால் போலீசார் தண்டிக்கலாம். தவறே செய்யாமல் இருக்கும்போது தண்டித்து எனது வாழ்க்கையை வீணடிக்க வேண்டாம்' என சொல்லும் ரமேஷ், தனது நிலை குறித்து அப்துல் கலாம் முதல் பத்திரிகைகள் வரை கடிதம் மூலம் தெரிவித்து வருத்தப்பட்டுள்ளார்.

- ஸ்பெக்ஸ்

 

தொகுப்பு

 

Website best viewed in Microsoft Internet Explorer 6.0+ in 1024x768 resolution