| Downloads | Contact Me | Feedback |
Tamil Font Problem? |

The Lost Hours  கடவுளுக்கு ஒரு சாபம் 

Google   wwwprramesh.com


download e-books
 

தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தினருக்கு
சிறந்த நடிகர் விருது!

பதி

குமுதம் ரிப்போர்ட்டர், 7-7-2005

"தமிழக அரசே இந்த ஆண்டு சிறந்த நடிகர்களுக்கான விருதை தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத் தலைவர்கள் ராமதாஸ், திருமாவளவன், சேதுராமனுக்கு வழங்கு!" என மதுரை நகரெங்கும் பரபரப்பு போஸ்டரை ஒட்டியிருக்கிறார் பி.ஆர்.ரமேஷ் இவர் பாரதிய ஜனதாகட்சி விவசாய அணியின் மதுரை மாவட்டச் செயலாளர்.

பி.ஆர்.ரமேஷ் மதுரை தாதாக்களில் ஒருவராக அடையாளம் காட்டப்பட்டவர். கொலை, கொலை முயற்சி என இவர் மீது இருபதுக்கும் மேல் வழக்குகள் இருந்த காலம் உண்டு. அனைத்திலிருந்தும் விடுதலையாகி, 'இப்போது எல்லாவற்றையும் விட்டுவிட்டேன்' என்கிறார்.

அவரிடம் "ஏன் தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தினரை கிண்டல் செய்து போஸ்டர் ஒட்டினீர்கள்?" என்று கேட்டோம்.

"பிறமொழி எழுத்துக்கள் மீது தார் பூசி அழிக்கும் போராட்டம் நடத்தப்போகிறோம். அதில் நீங்களும் கலந்துகொள்ளவேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் இயக்க நிர்வாகி ஒருவர் எனக்கு போன் செய்தார். நானும் அதற்கு 'நல்ல போராட்டம்தான்.

டாக்டர் சேதுராமன் ஆஸ்பத்திரியில் மீனாட்சி மிஷன் ஆஸ்பத்திரி என்ற போர்டு இருக்கிறது. அதில் மிஷன் என்ற வார்த்தையை முதலில் தார் பூசி அழிப்போம்' என்றேன். இதைக் கேட்டதும் அவர் பதறிப்போயிட்டார். 'அதெல்லாம் வேண்டாம். அவர் நம்ம தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தில் உள்ள முக்கிய நபர்.' என்றார். 'அப்படியென்றால் சாதாரணமானவன் வைத்திருக்கும் இட்லி, புரோட்டா கடையில்தான் அழிப்பீங்களா?'னு கேட்டேன். பதில் சொல்லலை. என்னை இதுக்கெல்லாம் கூப்பிடாமல் இருந்திருந்தால் நான் ஏன் அவர்களை இதில் இழுத்திருக்கப் போறேன்..." என்கிறார் சகஜமாக!

"தமிழ்ப் பாதுகாப்பு என்பது நல்ல விஷயம்தானே. அதற்காக ஏன் அவர்களை விமர்சிக்கவேண்டும்?"

"தமிழ் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தெல்லாம் கிடையாது. ஆனால் அவங்க எப்படி நடந்துக்கிறாங்க பாருங்க. திருமாவளவன் பிறந்தநாள் சென்னையில் நடந்தது. கூப்பிட்டிருந்தாங்க நான் போயிருந்தேன். அந்த விழாவில் அவர் 'இனி நான் வேட்டி, சட்டைதான் கட்டுவேன்னு சொன்னாரு' சொல்லி மூன்றாவது நாள் மீண்டும் பேண்ட் சட்டையில் தான் அவர் வந்தார். ஏன் இப்படி முன்னுக்குப் பின் முரணாகப் பேச வேண்டும்? அதனால்தான் விமர்சிக்கிறேன்" என்றார் ரமேஷ்.

இவர் மதுரையில் ஒட்டிய போஸ்டர்கள் பரபரப்பைக் கிளப்பினாலும் இரண்டே நாட்களில் மாயமாகிவிட்டன!

 

தொகுப்பு

 

Website best viewed in Microsoft Internet Explorer 6.0+ in 1024x768 resolution