| Downloads | Contact Me | Feedback |
Tamil Font Problem? |

The Lost Hours  கடவுளுக்கு ஒரு சாபம் 

Google   wwwprramesh.com


download e-books
 

"என்னை வன்முறைக்கு மட்டுமே பயன்படுத்த விரும்புகிறது பா.ஜ.க!"
மதுரை தாதா பி.ஆர். ரமேஷ் குமுறல்

ப.திருமலை

குமுதம் ரிப்போர்ட்டர், 11.09.2005

'அண்ணாநகர் பி.ஆர். ரமேஷ் - நமது வாசகர்களுக்கு அறிமுகமான பெயர். மதுரை தாதாக்களில் ஒருவர். பா.ஜ.க.வின் மதுரை மாவட்ட விவசாய அணியின் செயலாளர். கடந்த மூன்றாண்டுகளாகத் தனது வன்முறைக்கு ஓய்வு கொடுத்துவிட்டு, அரசியல், ஆன்மிகம் என்று இருந்தார். திடீரென வழிப்பறி வழக்கில் சிக்கி, ஐம்பது நாட்கள் சிறைவாசத்துக்குப் பிறகு திரும்பியுள்ளார்.

"பா.ஜ.க. என்னை வன்முறைக்கு மட்டுமே பயன்படுத்த விரும்புகிறது" எனக் கட்சி மீது குற்றம் சாட்டுகிறார் ரமேஷ். 'ஜெயிலில் வைத்து அவர் இஸ்லாமிய தீவிரவாதிகளுடன் செய்து கொண்ட சமரசம்தான், பா.ஜ.க. மீது குற்றம் சுமத்த காரணம்' என்கிறார்கள், பா.ஜ.க.வினர்.

ரமேஷைச் சந்தித்தோம்.

"என்னுடைய பதினான்காவது வயதில் வன்முறைப் பாதைக்குத் தள்ளப்பட்டேன். மூன்று முறை குண்டர் தடுப்புச் சட்டத்தைச் சந்தித்தேன். பதினான்கு வயது முதல் இருபத்தெட்டு வயதுக்குள், ஒன்பது வருடம் ஜெயிலிலேயே என் வாழ்க்கை கழிந்தது.

இனி, எந்த வன்முறைக்கும் போவதில்லை என முடிவுசெய்து, மக்கள் சேவையில் இறங்கினேன். பா.ஜ.க.வில் இணைந்தேன். என் செயல்பாட்டைப் பார்த்துவிட்டு, கட்சியின் விவசாய அணி மாவட்டச் செயலாளர் பதவி தந்தார்கள்.

கிறிஸ்துவர்களோ முஸ்லிம்களோ கொல்லப்படும்போதுதான், அரசியல் கட்சிகள் ஒன்று சேர்ந்து கண்டனக் குரல் எழுப்பும். இந்துவுக்காக எழுப்பாது. தீவிரவாதத்தில் ஈடுபட்ட முஸ்லிம்களைக் குண்டர்கள் சட்டத்திலும் போடுவதில்லை, என்கவுன்ட்டரும் செய்வதில்லை. வேண்டுமானால், இமாம் அலி போன்ற ஒரு சிலர் சுடப்பட்டிருக்கலாம். மெஜாரிட்டியான இந்துக்கள் எல்லா வகையிலும் பாதிக்கப்படுகிறார்கள். இதையெல்லாம் நான் பகிரங்கமாகவே சொன்னேன். அவ்வப்போது, அரசியல் கட்சிகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை விமர்சித்து போஸ்டர்கள் வெளியிட்டேன். பா.ஜ.க ஆட்களுக்கு இது பிடிக்கவில்லை. அவர்களிடம் கேட்காமல் இதையெல்லாம் செய்துவிட்டேன் என்ற கோபம் . அவுங்க கட்டுப்பாட்டில் என்னை இயக்கப் பார்த்தாங்க, முடியவில்லை என்றதும் கட்சியிலிருந்து ஒதுக்க ஆரம்பிச்சாங்க.

மதுரையில், முஸ்லிம் தீவிரவாதிகள் இந்து பிரமுகரைக் கொலை செய்யத் திட்டமிட்டிருக்கிறார்கள். என்பதை போலீஸில் சொன்னேன். 'யாரை கொல்லப்போறாங்கன்னு?" திருப்பிக் கேட்டாங்க. 'யாரைன்னு தெரியலை. என்னைக்கூட கொலை செய்யலாம். முஸ்லிம் தீவிரவாதிகளைக் கண்காணிங்கன்னு சொன்னேன். அவங்க அதைக் கண்டுக்கல. இந்து மக்கள் கட்சி மாநிலத் துணைத் தலைவர் காளிதாஸ் படுகொலை செய்யப்பட்டார்.

அதுவரை, என்னைக் கண்டுகொள்ளாமல் இருந்த பா.ஜ.கவினர், காளிதாஸ் படுகொலைக்குப் பிறகு என்னிடத்தில் நெருக்கம் காட்டத் தொடங்கினாங்க. இது அல்உம்மா கோஷ்டிகளுக்குத் தெரிஞ்சு, எனக்குப் பிரச்சினை ஏற்பட்டது. இந்தச் சூழ்நிலையில் போலீஸாரும் என்மேல் பொய்யாக வழிப்பறி கேஸ்போட்டு, ஜெயிலுக்குள் போட்டாங்க. 'ஏன்... இப்படிச் செய்யாத குற்றத்துக்கு என்னைக் கைது செய்தீங்க'ன்னு போலீஸில் கேட்டபோது, வெளியிலியிருந்தால் உன் உசிருக்கு ஆபத்து'ன்னாங்க. 'அத்வானியின் உசுருக்கு ஆபத்தென்றால் அவரை ஜெயிலுக்குள் போடுவீர்களா? எனக் கேட்டேன்.

ஜெயிலில் அல்உம்மா ஆட்களைச் சந்தித்தேன். 'காளிதாஸை ஏன் கொன்னீங்க?ன்னு கேட்டேன். 'இஸ்லாம் மார்க்கத்தை அவங்க கட்சித் தலைவர் ஸ்ரீதரன் தரக்குறைவாகப் பேசினாரு. அதனால் கொன்றோம்' என்றார்கள். ஸ்ரீதரன் பேசினால் அவரைத்தானே கொன்றிருக்க வேண்டும். ஏன் காளிதாஸைக் கொன்னீங்க?ன்னு கேட்டேன். 'ஸ்ரீதரன் பேசிட்டு இருக்கிறப்ப இவர் பக்கத்தில் உட்கார்ந்து சிரிச்சிட்டு இருந்தாரு அதனாலத்தான் இவரைக் கொன்றோம்'னு சொன்னாங்க.

என்மீது பொய் வழக்குப் போட்டபோது சிறிய ஆர்ப்பாட்டம் கூட நடத்தவில்லை பா.ஜ.க. முதலில் நான் இல. கணேசன் ஆதரவாளர் எனச் சொல்லி, மற்ற கோஷ்டியினர் ஒதுக்கினாங்க. பிறகு, திருநாவுக்கரசர் ஆதரவாளர் என முத்திரை குத்தப்பட்டேன். எச். ராஜாவை நான் பாராட்டினேன் என்பதற்காக அவருக்கு வேண்டியவருன்னாங்க. கடைசியில யாருமே எனக்கு ஆதரவு தரல.

ஏற்கெனவே, நான் எழுதிய இரண்டு கவிதைப் புத்தங்கள் விற்பனையில் இருக்கு. இப்போது மூன்று புத்தகங்கள் எழுதிட்டு இருக்கேன். அதில் 'அரசியல்வாதிகளும் அவர்களது குற்றங்களும்' என்பதும் ஒரு புத்தகம். இந்தப் புத்தகம் வெளியானால், பலரது ஒரிஜினல் முகம் தெரியவரும்.

சென்னையிலுள்ள ஒரு தாதா, என்னைத் தொடர்புகொண்டு 'நீ மக்களுக்கு, நல்லது செய்யறேன்னு சொல்லிட்டு செத்துப்போயிடாதே' என அட்வைஸ் செய்தார்.

இப்போது போட்ட பொய் வழக்கையும் முடித்துவிட்டு, வேறு மாநிலம் செல்ல முடிவு செய்துவிட்டேன். அங்கு எதாவது உழைத்துப் பிழைத்துக்கொள்வதாக இருக்கிறேன். இந்தத் தகவலை குடியரசுத் தலைவர், மனித உரிமை ஆணையம், முதல்வர் உட்பட அனைவருக்கும் அனுப்பிவிட்டேன்" என வேதாந்திபோல பேசினார் ரமேஷ்

பா.ஜ.க.வினர் சிலரிடம் ரமேஷ் குறித்துக் கேட்டபோது... "கட்சியில் சேர்ந்த சில நாட்களிலேயே அவருக்குப் பதவி கொடுக்கப்பட்டது. கட்சிக்கென்று ஒரு கட்டுப்பாடு உண்டு. அதையெதையும் அவர் கண்டுகொள்ளாமல் செயல்பட்டார். 'வன்முறைக்கு என்னைப் பயன்படுத்தப் பார்க்கிறாங்க' என்று அவர் சொல்வது முழுத் தவறு. வன்முறையை விரும்பாதவர்கள் நாங்கள்" என்றார்கள்.

 

தொகுப்பு

 

Website best viewed in Microsoft Internet Explorer 6.0+ in 1024x768 resolution