தாமரை பிப்ரவரி 2005
தாமரைக்கு...
வணக்கம்.
மனிதன்
எதிலாவது ஒன்றில்தான் வீணர்களால் புறக்கணிக்கப்படுகிறான். அதற்கே அவன்
அழுகிறான். கொதித்தெழுகிறான்!
புறக்கணிக்கப்படுவதே எமது வாழ்வின் அடையாளங்களான பிறகு,
எப்படி நான் அழாமல், கொதித்தெழாமல் இருந்திருக்க முடியும்?
புறக்கணிக்கப்படுகிறவனுக்குத் தான் புறக்கணிப்பின் கொடுமை
புரியும். தெரியும்!
இங்கே போராளிகள் போக்கிரிகளாகவும், போக்கிரிகள்
போராளிகளாகவும் பொய்யுரைக்கப்படுவதில் நான் மட்டும் விதிவிலக்கல்ல!
வன்முறையைத் துடைத்த, ஜனநாயகத்தைப் பிடித்து நிற்கும்
என்னை மக்கள் ஏற்றுக் கொண்டனர். சில மடையர்கள் ஏற்க மறுக்கின்றனர்.
இந்த வினோதம் அவர்களுக்கே விரோதம்!
துன்பத்திற்கு வாக்கப்பட்டவனின் தொலைந்த நேரங்கள் (ளை)
தொலைவில் தூக்கி எறியும், பொய்மைகளை தோலுரிக்காத தின ஏடுகள், வாரஇதழ்கள்,
மாத இதழ்கள் மத்தியில் எம்மை மனிதனாக ஏற்று, எழுத்தாளனாக பார்த்து, எமது
நூலை மனதிலே பருகி, அதன் பசியையும் ருசியையும் மிக அழகாக, ஆழமாக, அன்பாக,
அதட்டலாக, ஆணித்தரமாக, நேர்மையான உண்மையின் உயிர் அணுக்கள் எத்தனையோ,
அத்தனையும் எமது நூலான, தொலைந்த நேரங்கள் (ளின்) நூல் விமர்சனத்தில்
பார்த்தேன், வியந்தேன், மகிழ்ந்தேன். ஒரு உண்மையையும் அறிந்தேன், ஆம்.
உண்மைகளுக்கு உயிர்த்துவம் தருவதால்தான் தாமரை(க்கு) சிறையில் தடை
இருக்கிறது என்பதைத்தான்!
உழைப்போரின் உயிர் துடிப்பான தாமரைக்கும், நூல்களின்
விமர்சன விடியல் எஸ். சோமு அவர்களுக்கும்,
நான் இருக்கும் வரை எமது நன்றிகளும் இருக்கும் என்பதை,
நமது ஆழ்மனதிலே உறுதி எடுத்துக்கொண்டேன்.
தொலைந்த நேரங்கள்
-
நூல் விமர்சனம்
தாமரை ஜனவரி 2005 |