தினமணி மாநகர் மணி, புதன்கிழமை,
24 ஏப்ரல், 2002
ஆதிக்கப்
பாறைகள்
வெடித்துச் சிதறட்டும்!
அதிகார வாழ்வை
அடியோடு மறக்கட்டும்!
கொடுமைகளும்
வறுமைகளும்
உழைப்போர் வாழ்வில்
அறவே அகலட்டும்!
உழைத்து உழைத்து
மனம் இளைத்துப் போனவர்கள்
விடியலை நோக்கி
பயணம் தொடரட்டும்!
உழைப்பவர் மனதில்
எழுச்சி பொங்கட்டும்!
வளரும் பாரதம்
வல்லரசாய் மலரட்டும்!
மே தினம் பிறக்கட்டும்
உழைக்கும் வர்க்கத்தின்
வெற்றிக்கொடி உச்சத்தில்
பறக்கட்டும்! |