| Downloads | Contact Me | Feedback |
Tamil Font Problem? |

The Lost Hours  கடவுளுக்கு ஒரு சாபம் 

Google   wwwprramesh.com


download e-books
 

சிறையில் பூத்த மலர்!

-ந.நி.

தமிழன் எக்ஸ்பிரஸ், ஜனவரி 15-21, 2003

கடந்த வாரம் மதுரையில் ஒரு கவிதை நூல் வெளியீட்டு விழா நடந்தது.

இதில் என்ன செய்தி என்கிறீர்களா?

'பாலைவனத்தில் நெற்கதிர்கள்' என்ற அந்தக் கவிதைத் தொகுப்பை எழுதிய ரமேஷ், பல கொலை, கொள்ளை வழக்குகளில் சிக்கி, சிறைத்தண்டனை அனுபவித்தவர்! தவிர மூன்று ஆண்டுகள் குண்டர் தடுப்புச் சட்டத்தில் தண்டனை பெற்றவர்.

இந்தத் தொகுப்பில் இடம்பெற்ற கவிதைகள் எல்லாம் அவர், சிறைவாசத்தில் இருந்தபோது எழுதியவை!

அண்ணாநகர் பொன்மணி மகாலில் நடந்த வெளியீட்டு விழாவில், மதுரை வக்கீல் சங்கத் தலைவர் கே. வெள்ளைச்சாமி புத்தகத்தை வெளியிட, கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்றத் தலைவர் ஆர். சொக்கலிங்கம் பெற்றுக்கொண்டார்.

"சமயநல்லூரைச் சேர்ந்த கனகசபாபதி என்ற இளைஞர் இன்ஜினியரிங் படிக்கிறார். வறுமை காரணமாகப் படிப்பைத் தொடரமுடியாத நிலை அவருக்கு.

இந்தப் புத்தக விற்பனை மூலம் வரும் வருவாயில், கனக சபாபதியின் படிப்புக்கு உதவியாகப் பத்தாயிரம் ரூபாய் நன்கொடையாக அளிக்க விரும்புகிறேன்' என்று அறிவித்தார் ரமேஷ்.

கவிதைகள், கவிஞர்... இரண்டும் ஏற்படுத்திய நெகிழ்ச்சியைவிட கவிஞர் ரமேஷின் பேச்சு இன்னும் நெகிழ வைத்தது.

 

தொகுப்பு

 

Website best viewed in Microsoft Internet Explorer 6.0+ in 1024x768 resolution