தினமலர் மதுரை 6-1-2003
மதுரை, ஜன.6 - பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகள் சம்பந்தமாக
ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த ரமேஷ் என்பவர் தான் ஜெயிலில் இருந்த
காலங்களில் எழுதிய கவிதைகளைப் புத்தகமாக நேற்று வெளியிட்டார்.
மதுரை அண்ணாநகரைச் சேர்ந்தவர் ரமேஷ். இவர் மீது பல
கிரிமினல் வழக்குகள் இருந்தன. இதுசம்பந்தமாக 6 ஆண்டுகள் மதுரை ஜெயிலில்
விசாரணை கைதியாக அடைக்கப்பட்டிருந்தார். இதுதவிர 3 ஆண்டுகள் குண்டர்
தடுப்பு சட்டத்தின் கீழும் ஜெயிலில் இருந்தார். இக்காலக்கட்டத்தில் தான்
எழுதிய கவிதைகளை 'பாலைவனத்தில் நெற்கதிர்கள்' என்ற கவிதை தொகுப்பு
புத்தகமாக நேற்று வெளியிட்டார். இதற்கான நிகழ்ச்சி அண்ணாநகர் பொன்மணி
மகாலில் நடந்தது. உலக ஹோட்டோ கான் கராத்தே சம்ளேன மாநிலச் செயலாளர்
காளைராஜா வரவேற்றார். ஞானபீடம் இலக்கியப் பேரவை செயலாளர் சந்திரசேகரன்
தலைமையில் மதுரை வக்கீல் சங்கத் தலைவர் வெள்ளைச்சாமி புத்தகத்தை வெளியிட,
கண்ணதாசன் நற்பணி மன்றத் தலைவர் சொக்கலிங்கம் பெற்றுக்கொண்டார். மனித
உரிமைக் கழக ஆலோசகர் சாமிதுரை, மணிவண்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
விழாவில் பேசிய ரமேஷ், இப்புத்தகத்திலிருந்து வரும் வருமானத்தில் ரூ. 10
ஆயிரத்தைத் தனது இன்ஜினியர் படிப்பைத் தொடர முடியாமல் இருக்கும் சமய
நல்லூரில் உள்ள கனகசபாபதி என்ற மாணவருக்கு நன்கொடையாக அளிக்கத்
திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறினார். நிகழ்ச்சிகளைப் புலவர் சங்கரலிங்கம்
தொகுத்து வழங்கினார். பிச்சைக்கனி நன்றி கூறினார். |